2 கிராமங்களைத் தத்தெடுத்தார் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி!

top-news
FREE WEBSITE AD

கோலசிலாங்கூர்‌, செப்‌. 10-  நாட்டில்‌ உள்ள எல்லா தலைவர்களும்‌ 'ஒரே தலைவர்‌; ஒரே கிராமம்‌' எனும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ கிராமங்களை அல்லது தோட்டங்களைத்‌ தத்தெடுக்க வேண்டும்‌ எனும்‌ பிரதமர்‌. டத்தோஸ்ரீ அன்வார்‌ இப்ராஹிமின்‌ உத்தரவுக்கிணங்க கோலசிலாங்கூர்‌ வட்டாரத்தில்‌ உள்ள இரண்டு தோட்டங்களை தேசிய ஒற்றுமைத்‌துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தத்தெடுத்துள்ளார்‌.

புக்கிட் தாகார்‌ மற்றும்‌ மேரி தோட்டங்களை தாம்‌ தத்தெடுத்துள்ளதாக. அவர் கூறினார்‌. ஒவ்வொரு தலைவரும்‌ ஒரு கிராமத்தை தத்தெடுக்கும்‌ திட்டத்தை பிரதமர்‌ டத்தோஸ்ரீ அன்வார்‌ இப்ராஹிம்‌ அறிவித்தார்‌. அமைச்சர்கள்‌, துணையமைச்சர்கள்‌, ஆட்சிக்குழு உறுப்பினர்கள்‌, அமைச்சின்‌ தலைமைச்‌ செயலர்‌ ஆகிய அரசு நிர்வாகத்தில்‌ உயரிய பதவியில் உள்ளவர்கள், தாங்கள்‌ பிறந்து வளர்ந்த கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள மக்களின்‌ மேன்மைக்கு சேவையாற்ற வேண்டும்‌ என்று பிரதமர் கூறியதை அடுத்து, தான் பிறந்து வளர்ந்தது பினாங்கு கோர்ஜ்டவுன்‌ என்றாலும்‌ தோட்டபுற மக்களுக்கு தமது சேவை அதிகமாக பயன்படும்‌ என்ற நோக்கிலே இவ்விரு தோட்டங்களை தாம்‌. தேர்ந்தெடுத்து அதற்கான. பிரதமர்‌ துறையின்‌ ஒப்புதலையும்‌ பெற்றுவிட்டதாக அவர்‌ கூறினார்‌.

நேற்று முன்‌தினம் கிள்ளான்,‌ தெலுக்‌ புலாய்‌,  நாவலர்‌ மண்டபத்தில், இயல்‌ இசை நாடகம்‌ மன்றம்‌ மற்றும்‌ கிள்ளான்‌. மாவட்டத்‌ தமிழ்ப்பள்ளித்‌ தலைமையாசிரியர்‌ மன்றம்‌ இணைந்து நடத்திய 20-ஆம் மாணவர் பண்பாட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இசை, நடனம்‌, நாடகம்‌ உள்ளிட்ட கலைப் படப்புகள் மூலம்‌ மாணவர்கள்‌ தங்கள்‌ திறமைகளை வெளிப்படுத்தினர்‌. முக்கியமாக, மாணவர்கள்‌ 30 திருக்குறளை மனனம்‌ செய்து. பிழையில்லாமல்‌ சொல்லும்‌ போட்டியில்‌ கலந்துகொண்டு, நினைவாற்றல்‌ மற்றும்‌ தமிழின்‌ செழுமையான பண்பாட்டை. மேம்படுத்தும்‌ ஒரு சிறந்த முயற்சியாக செயல்பட்டனர்‌. இவ்வாறான நிகழ்ச்சிகள்‌, மாணவர்களின்‌ தன்னம்பிக்கை மற்றும்‌ நம்பிக்கையை வளர்த்து, எதிர்காலத்தில்‌ சிறந்த கலைஞர்களாக உருவாக உதவும்‌ என்று செனட்டர்‌ சரஸ்வதி. கந்தசாமி தமது உரையில்‌ வலியுறுத்தினார்‌. மேலும்‌, இந்த வகை நிகழ்ச்சிகள்‌ தமிழர்‌ கலாச்சாரத்தை உலகளவில்‌ உயர்த்தும்‌ முக்கிய முயற்சியாக இருக்கும்‌ என்றும்‌ அவர்‌ கூறினார்.

இந்தியர்களின் கலாச்சாரத்தை உலக அரங்கில்‌ உயர்த்தும்‌ இத்தகைய விழாக்கள்‌ தொடர்ந்து. நடைபெறுவது அவசியம். , மேலும்‌ இதுபோன்ற நிகழ்வுகள்‌ பலரையும்‌ ஈர்க்கும்‌ என்பதில்‌ சந்தேகம்‌ இல்லை, என செனட்டர்‌  அவர் தெரிவித்தார்‌.  இது போன்று நிகழ்வுகளில்‌ பங்கேற்கும்‌ வாய்ப்புகள்‌ தோட்டப்புற மாணவர்களுக்கும் அமைய வேண்டும். குடும்பச் சூழலின்‌ காரணமாக மேற்கல்வியைத் தொடரவே அதிகம்‌சிரமப்படுகின்றனர்‌.. அவர்களுக்கும்‌ இதுபோன்ற நிகழ்வில்‌ கலந்து கொள்ளும்‌ வாய்ப்பு வழங்கப்பட்டால்‌  தலைமுறையின்‌ எண்ணிக்கை: இரட்டிப்பாகும்‌ என அவர்‌ கூறினார்‌. அவ்வகையில்‌ தாம்‌: 'தத்தெடுத்துள்ள மேரி தோட்டம்‌ மற்றும்‌ புக்கிட்‌ தாகார்‌ தோட்ட‌ ஆரம்ப மற்றும்‌ இடைநிலைப்பள்ளி மாணவர்க‌ளுக்கு கல்வி மற்றும்‌ கலை, கலாச்சார விஷயங்களை அளிக்கவிருப்பதாக அவர்‌. கூறினார்‌. அங்கும்‌ மாணவர்‌ பண்பாட்டு நிகழ்ச்சிகள்‌. நடத்தப்பட வேண்டும்‌ என்பதை அவர்‌ குறிப்பிட்டார்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *