தெரேசா கோக் - ஹலால் கருத்து குறித்து உணர்ச்சிவசப்பட வேண்டாம்!- முஸ்லீம் சமூகத்திற்கு சைட் இப்ராஹிம் வலியுறுத்து

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 9: ஹலால் சான்றிதழின் விதிமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியதற்காக, தெரசா கோக் காவல்துறையினரால் விசாரிக்கப்படத் தேவையில்லை என்று,  அமைச்சர் சைட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

செப்பூத்தே எம்.பியும், டிஏபி துணைத் தலைவருமான கோக், பொது நலன் சார்ந்த விஷயத்தைக் கொண்டு வந்துள்ளார். இது பொது அறிவு மூலம் விரைவில் தீர்க்கப்படக் கூடியதாக உள்ளது என்று ஜைட் கூறினார். அதற்காக கோக்கை பிரச்சனை செய்பவர் என்று காரணம் சொல்லக்கூடாது என அவர் குறிப்பிட்டார்

முஸ்லீம் அல்லாத தலைவர் ஒருவர் ஹலால் உணவு சான்றிதழ் போன்ற விஷயத்தை எழுப்பும்போது உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்று அவர் முஸ்லிம் தலைவர்களை வலியுறுத்தினார்.

அந்தப் பிரச்சினை எல்லையைத் தாண்டியிருக்கலாம். அதற்காக ஒரு விவாதத்தை நடத்துங்கள் என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பன்றி இறைச்சி மற்றும் மதுவை வழங்காத உணவு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் தேவை என்ற உத்தேச விதியை மறுஆய்வு செய்ய கோக் அழைப்பு விடுத்திருந்தார். இது சிறு வியாபாரிகளுக்கு சுமையாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். அவரின் இந்தப் பேச்சு சர்ச்சையாகி விசாரணை வரைக்கும் சென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பக்காத்தான் ஹராப்பான் தலைவரான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவர் "சரியான வழிகளில்" சென்றிருக்க வேண்டும் என்றும், அவரது கருத்துகள் தேவையற்றவை என்றும் சிக்கலை  மேலும் சிக்கலாக்கியதாகவும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NikeSpivY

darknet links <a href="https://mydarknetmarketlinks.com/ ">dark market </a> darkmarket url