பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சேவை தொடரும்! - தெங்கு ஜஃப்ருல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 12: செனட்டர் பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைந்த பிறகும், அரசாங்கப் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், 'அரசியல் ரீதியாக' நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்ய விரும்புவதாக தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் கூறினார்.

இருப்பினும், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ப்தவி தொடர்பாக தனது செனட்டர் பதவி முடிந்ததும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தில் ஒரு பதவியாக கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. நஅரசாங்கத்திற்கும், நாட்டிற்கும் பல வழிகளில் பங்களிக்க முடியும். எனவே தமக்கு அது முக்கியம் என அவர் கூறினார்.

ஆனால் அரசியல் ரீதியாக, தாம் தொடர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய விரும்புவதாகவும், "பிகேஆரில் சேருவதற்கான தனது விருப்பத்தை ஏற்கெனவே தெரிவித்துள்ளதாகவும் அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

அதே நேரத்தில், டிசம்பரில் செனட்டராக தனது பதவிக் காலத்தை முடிப்பதற்கு முன்பு அமைச்சகத்தில் தனது தற்போதைய பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

 செனட்டர் பதவி முடிந்ததும், அமைச்சர் பதவி என்னாகும் என்ற கேள்விக்கு இந்த விஷயம் முற்றிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் விருப்பப்படி இருக்கும் என்று கூறினார்.

Tengku Datuk Seri Zafrul berkata beliau ingin terus berkhidmat kepada negara secara politik walaupun tamat tempoh Senator Disember ini. Beliau belum putuskan langkah seterusnya tetapi komited terhadap tugas kini di kementerian.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *