புயலே வந்தாலும் போராட்டத்தில் உறுதியாக இருங்கள்! - கட்சியினருக்கு முகைதீன் வேண்டுகோள்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 9: பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின் பெர்சாத்துவின் எட்டாவது ஆண்டு விழாவுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் அடித்தளம் இப்போது பகிரங்கமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்திரர்களின் உரிமைகளையும், இஸ்லாத்தின் நிலைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான கட்சியின் முயற்சிகள், இனம், மதம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான குற்றங்களாக வடிவமைக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்,

நியாயமான போராட்டத்தை நிலைநிறுத்துவது மட்டுமே நோக்கமாக இருந்தாலும், தூண்டுதல் மற்றும் வழக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம் என்றும்,எதிர்ப்பாளர்கள் கட்சியை மௌனமாக்க விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம், தங்கள் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு வெட்கமின்றி சட்டம் மற்றும் அரசு நிறுவனங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களின் இலக்கு என்ன? அரசியல் ஆதாயம் தவிர வேறில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

புயல்கள் வந்தாலும், உலகையே உலுக்கும் அளவுக்கு மின்னலும், இடியும் வந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்தப் போராட்டத்தில் உறுதியாக இருங்கள் என்று கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டார்.

 நீங்கள் இல்லையென்றால், நமது மதம், இனம் மற்றும் தாயகத்திற்கான இந்த உன்னத நோக்கத்தின் தீபத்தையும் பதாகையையும் யார் ஏந்துவார்? என்று அவர் கேள்வி எழுப்பினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *