அமெரிக்காவுக்கான புதிய மலேசியத் தூதர் நியமனம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 4-

அமெரிக்காவுக்கான புதிய மலேசியத் தூதராக வெளியுறவு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷாருல் இக்ராம் யாக்கோப் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான மலேசியத் தூதராக இருந்த நஸ்ரி அஸிஸ் கடந்த பிப்ரவரியில் பணிஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக அப்பதவி காலியாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்பதவிக்கு இப்போது ஷாருல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்முறை அரசதந்திரியான ஷாருல், இஸ்தானா நெகாராவில் தமது பணிநியமனக் கடிதத்தை மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமிடருந்து பெற்றுக் கொண்டார். ஷாருனுக்கு முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அரசதந்திரத்துறையில் சேவையாற்றிய அனுபவம் உண்டு. அமெரிக்காவிலும் இரண்டு தவணைகளுக்கு அவர் சேவையாற்றியுள்ளார். இன்னும் பிறவற்றோடு வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள தூதரக அலுவலகங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

கடந்த 1990ஆம் ஆண்டுகளில் வாஷிங்டனில் உள்ள மலேசியத் தூதரகத்தின் முதல்நிலைச் செயலாளராகவும் 2017ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை நியூயார்க்கில் உள்ள ஐநா சபைக்கான மலேசியாவின் நிரந்தரப் பேராளராகவும் அவர் சேவையாற்றியுள்ளார். கத்தார் மற்றும் ஆஸ்திரியாவுக்கான மலேசியத் தூதராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.

Bekas Ketua Setiausaha Kementerian Luar, Shahrul Ikram Yaakob dilantik sebagai Duta Malaysia ke Amerika Syarikat. Beliau berpengalaman lebih 34 tahun dalam bidang diplomatik, termasuk pernah berkhidmat di Washington, Beijing, New York, Qatar dan Austria.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *