சமூக ஆர்வலர் Fahmi Reza மீது ஏன் தடை? காவல்துறைக்கு அன்வார் கேள்வி!

- Sangeetha K Loganathan
- 08 Jun, 2025
ஜூன் 8,
சமூக ஆர்வலர் Fahmi Reza மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணம் செய்வதற்கான தடை குறித்த பிரச்சினையை மறுபரிசீலனை செய்யுமாறும் இப்படியானத் தடையை விதிப்பதற்கு என்ன காரணம் என்பதை விளக்கமளிக்கும்படியும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim காவல் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார். அரசாங்கத்தின் மீதும் அரசு அதிகாரிகள் மீதும் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய Fahmi Reza முன்னதாகச் சிங்கப்பூருக்குச் செல்ல விமான நிலையம் அனுமதி மறுத்ததாகவும் அவர் மலேசியாவிலிருந்து வெளியேற புக்கிட் அமான் தடைவிதித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் சட்ட விதிகளை மீறாத ஒரு தனிநபர் மீது காவல்துறை தடை விதித்திருப்பதை மடானி அரசாங்கம் கண்டிப்பதாகவும் தனிநபர் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்குவது செயல்களைத் தாம் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக விரைந்து காவல்துறை விளக்கமளிக்க வேண்டுமென பிரதமர் Datuk Seri Anwar Ibrahim ஓர் அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தினார்.
Perdana Menteri Anwar Ibrahim mengarahkan polis menjelaskan sebab larangan perjalanan terhadap aktivis Fahmi Reza. Beliau juga mahu isu ini disemak semula kerana tindakan itu melibatkan kebebasan individu tanpa ancaman nyata kepada keselamatan negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *