துணைத் தலைவர் போட்டியில் தோற்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்! – ரஃபிஸி ரம்லி

- Shan Siva
- 11 May, 2025
சுபாங் ஜெயா, மே 11: பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் பிகேஆர் துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ரஃபிஸி ரம்லி சபதம் செய்துள்ளார்.
அமைச்சரவையில்
இனி இடம்பெறவில்லை என்றால் அது ஒரு நிம்மதியாக இருக்கும் என்றும், பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு
அதிக நேரமும் சுதந்திரமும் கிடைக்கும் என்றும் ரஃபிஸி தெரிவித்துள்ளார்.
"நான்
தோற்றால், நான் ராஜினாமா
செய்து வழக்கமான எம்.பி.யாக இருப்பேன்" என்று செர்டாங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வில்
கூறினார்.
பிரதமர் அன்வார்
இப்ராஹிமின் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தால், அது ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையைப் பாதிக்காது
என்றும் ரஃபிஸி மேலும் கூறினார்.
அமைச்சராக இருப்பது என்பது நிறைய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும் என்றும், அரசாங்க உறுப்பினராக வாயும் கைகளும் கட்டப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்!
Rafizi Ramli bersumpah akan meletak jawatan sebagai Menteri Ekonomi jika gagal dipilih semula sebagai Timbalan Presiden PKR. Beliau menyatakan tidak berada dalam kabinet akan memberi lebih kebebasan untuk fokus sebagai Ahli Parlimen dan membantu PKR hadapi PRU ke-16.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *