யானைகளுக்கு விஷம் வைத்தது நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!
- Shan Siva
- 09 Jun, 2024
குளுவாங், ஜூன் 9: கடந்த ஜூன் 1 ஆம் தேதி குளுவாங்கில் ஒரு தாய் யானையும் அதன் மூன்று குட்டிகளும் இறந்து கிடந்தது தொடர்பில், ஆய்வக மற்றும் நச்சுயியல் சோதனை முடிவுகளுக்காக மாநில அரசு இன்னும் காத்திருப்பதாக ஜொகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.
ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், நான்கு யானைகளின் இறப்புக்கான காரணம் சுவாசம் மற்றும் உறுப்பு செயலிழப்பு உட்பட உட்புற இரத்தப்போக்கும் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு யானைகள் சுவாசம் மற்றும் உறுப்பு செயலிழப்பை சந்தித்தது ஏன் என்பதைக் கண்டறிய கூடுதலாக, ஆய்வக சோதனைகளின் முடிவுகள் தேவை. இதில் பாக்டீரியாலஜி மற்றும் வைராலஜி சோதனைகள் அடங்கும் என்று அவர் கூறினார்.
யோங் பெங் சட்டமன்ற உறுப்பினர் லிங், நான்கு யானைகளும் விஷம் வைத்து இறந்தது நிரூபிக்கப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *