பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு இலவச ஸ்டேடியம்! - ஹன்னா யியோ

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 25: அக்டோபர் 2023 முதல் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (கேபிஎஸ்) மற்றும் மலேசியா ஸ்டேடியம் கார்ப்பரேஷன் (பிஎஸ்எம்) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகளை அமைப்பதற்காக 13,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஸ்டேடியம் வசதிகளை இலவசமாகப் பயன்படுத்துவதன் மூலம் பயனடைந்துள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் Hannah Yeoh தெரிவித்தார்

இந்த வாடகை விலக்கு முன்முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்கு முன், புக்கிட் ஜலீல் நேஷனல் ஸ்டேடியத்தின் (SNBJ) அரை நாள் பயன்பாட்டிற்கு RM3,000 மற்றும் ஒரு நாள் பயன்பாட்டிற்கு RM5,000 வாடகை கட்டணம் வசூலிக்கப்பட்டது. அரசு சாரா பள்ளிகளுக்கு அரை நாள் பயன்பாட்டிற்கு RM4,000 மற்றும் ஒரு நாள் பயன்பாட்டிற்கு RM8,000 வாடகை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், மலேசியாவில் உள்ள அனைத்து மைதானங்களும் அமைச்சின் மேற்பார்வையில் இல்லை. மாநில அரசு, உள்ளாட்சி அமைப்பு மற்றும் தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் மைதானங்கள் உள்ளன. இதேபோன்ற முயற்சியை செயல்படுத்த ஊக்குவிப்பதற்காக  இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு உள்ளூர் அதிகாரிகளுடன் பல சந்திப்புகளை நடத்தியது,” என்று கேள்வி நேரத்தில் பக்காத்தான் ஹராப்பான் துவாரான் எம்.பி டத்தோஸ்ரீ பங்லிமா மடியஸ் டங்காலிக்கு அவர் பதிலளித்தார்.

தேசிய மைதானம், கோலாலம்பூர் ஸ்போர்ட்ஸ் சிட்டி, புக்கிட் கியாரா விளையாட்டு வளாகத்தில் உள்ள நெட்பால் மைதானம் மற்றும் மற்றும் துன் ரசாக் ஹாக்கி ஸ்டேடியம் ஆகியவற்றில் உள்ள தடம் மற்றும் வசதிகளை பயன்படுத்தும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த முயற்சி திறக்கப்பட்டுள்ளது என்று ஹன்னா யியோ கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *