பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!

top-news

ஜூன் 5,

அடுக்குமாடிக் குடியிருப்பின் வாகனம் நிறுத்துமிடத்தில் பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரைப் பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இரவு 11.15 மணிக்கு 38 வயது பெண் அடுக்குமாடிக் குடியிருப்பின் பார்கிங்கில் வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து போகும் போது 24 வயது ஆடவர் அப்பெண்ணை நெருங்கி வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக Timur Laut மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Mohammad தெரிவித்தார். 


சம்பவத்தின் போது அப்பெண் கூச்சலிட்டதாகவும் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞரைச் சுற்றி வலைத்துப் பிடிக்கும்படியானக் காணொலி ஞமூக வலைத்தலங்களில் பரவியது. இது தொடர்பானக் காணொலியை மேலும் பகிர வேண்டாம் என Timur Laut மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Mohammad கேட்டுக் கொண்டார். கைது செய்யப்பட்ட 24 வயது ஆடவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாக Timur Laut மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Mohammad தெரிவித்தார்.

Seorang wanita berusia 38 tahun diganggu secara seksual oleh lelaki berusia 24 tahun di tempat letak kereta pangsapuri di Timur Laut. Lelaki itu ditahan oleh orang awam dan diserahkan kepada polis. Kes kini dalam siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *