கையாலாகாத அரசு! திமிர் பிடித்த முஸ்லீம் அல்லாத தலைவர்கள்! ஹாடி அவாங் குற்றச்சாட்டு
- Shan Siva
- 13 Sep, 2024
தெமர்லோ, செப் 13: கட்டாய ஹலால் சான்றிதழுக்கான முன்மொழிவு குறித்த குழப்பத்தில் கூட, அரசாங்கத்தில் உள்ள மலாய் அடிப்படையிலான கட்சிகள் பலவீனமாகவும், முஸ்லிம் அல்லாத தங்கள் கூட்டாளிகளைக் கையாள முடியாமல் இருப்பதாகவும் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தில் உள்ள பல கட்சிகள் மலாய்-முஸ்லிம் அடிப்படையிலானவை என்றாலும், இஸ்லாத்தின் புனிதத்தை உள்ளடக்கிய விஷயங்களில் வெற்றிபெறத் தவறிவிட்டதாக ஹாடி குற்றம் சாட்டினார்.
அம்னோ, பிகேஆர் மற்றும் அமானாவுடன் இணைந்த ஒற்றுமை அரசாங்கத்தால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் முஸ்லீம் அல்லாத கூட்டாளிகளை கையாளும் திறனற்ற நிலையில் அக்கட்சிகள் உள்ளன என்று அவர் சாடினார்.
இப்போது, அரசாங்கத்தில் உள்ள முஸ்லிமல்லாத (தலைவர்கள்) இதன் காரணமாக திமிர்பிடித்துள்ளனர் என்று நேற்று நடைபெற்ற பாஸ் இளைஞர் உச்சி மாநாட்டில் உரையாற்றிய போது ஹாடி இதனைத் தெரிவித்தார்.
நமது போராட்டத்தில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு உள்ளது என்பதை இது மேலும் எடுத்துக்காட்டுகிறது.
ஹலால் சான்றிதழ் முன்மொழிவு தொடர்பாக டிஏபி எம்பி தெரசா கோக் வெளியிட்ட அறிக்கையை மலாய் ஒற்றுமை அரசாங்கத் தலைவர்கள் கேள்வி கேட்கத் தவறியதாக மராங் எம்.பியுமான அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *