பெட்ரோலிய கிடங்கில் தீ! மூவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 12 Jun, 2025
ஜூன் 12,
கூலாய் Jalan Timur 4 LPG பெட்ரோலிய கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் உயிருடன்ன் மீட்கப்பட்டனர், இன்று அதிகாலை 1.40 மணிக்குத் தீ விபத்துக் குறித்து பெட்ரோலிய கிடங்கின் பாதுகாவலரிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் 13 தீயணைப்பு மீட்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூலாய் மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய அதிகாரி Asmiza Zaini தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்பு ஆணைய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மூவரையும் மீட்டு கூலாய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் பாதிக்கப்பட்ட மூவரும் LPG பெட்ரோலிய கிடங்கில் வேலை செய்து வரும் 30 முதல் 40 வயதுக்குற்பட்ட உள்ளூர் ஆடவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதிகாலை 3.25 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் LPG பெட்ரோலிய கிடங்கு 85% தீயில் கருகியதாகவும் கூலாய் மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய அதிகாரி Asmiza Zaini தெரிவித்தார்.
Tiga pekerja tempatan berusia 30 hingga 40 tahun cedera parah dalam kebakaran di gudang LPG di Jalan Timur 4, Kulai. Kebakaran yang berlaku sekitar 1.40 pagi berjaya dikawal sepenuhnya pada 3.25 pagi dengan 85% gudang musnah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *