HALAL கட்டாயமா? AKMAL SALEH செய்வது வெறுப்பு அரசியல் – YB Thulsi Manogaran

top-news
FREE WEBSITE AD

உணவகங்களுக்கு HALAL சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதற்கான எந்தவோர் அவசியமுமில்லை என BUNTONG சட்டமன்ற உறுப்பினர் Thulsi Manogaran அறிவுருத்தினார். இஸ்லாமிய மேம்பாட்டு துறையான JAKIM குறிப்பிடுவது இஸ்லாம் அல்லாதவர்களையும் அது பாதிக்கும் என Thulsi Manogaran நினைவுருத்தினார். HALAL சான்றிதழ் குறித்தான விவகாரங்களை முதிர்ச்சியுடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதை அரசியலாக்கவோ, இனங்களுக்கிடையிலானப் பேதங்களை அதிகரிக்கும்படியானக் கருத்துகளைப் பதிவு செய்யவோ தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.

HALAL சான்றிதழ் குறித்தான முடிவுகளைக் குறிப்பிட்ட வணிகர்களே நிர்ணயிக்கும் வகையில் இருப்பது முறையாக இருக்கும் என்றும், அதைக் கட்டாயமாக்குவது தேவையற்றதும் நியாயமற்றதுமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இது சுமூகமாக அரசு துறைகளும் வணிகர்களும் கலந்து பேசினாலே தீர்வைக் காணும் நிலையில் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh இதை இன ரீதியிலான அரசியலாக மாற்றியிருப்பதாகவும் தேவையற்றதைப் பேசி HALAL சான்றிதழ் குறித்தான கருத்துகளை விடவும் YB Teresa Kok மீதான வெறுப்பு அரசியலைக் கட்டவிழ்த்து விடுவது தான் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh’க்கு முக்கியமாக இருக்கிறது என BUNTONG சட்டமன்ற உறுப்பினர் Thulsi Manogaran தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *