இளவரசருக்கும் பிரதமருக்கும் நன்றி! - Hannah Yeoh

- Sangeetha K Loganathan
- 11 Jun, 2025
ஜூன் 11,
நேற்று புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் நடந்த வியாட்னாமிற்கு எதிரான ஆசியக் கோப்பை கால்பந்து சுற்றில் மலேசியா 4க்குச் சுழியம் என வெற்றிப் பெற்றதற்க்கு முக்கிய காரணம் ஜொகூர் இளவரசரும் பிரதமரும் தான் என இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் Hannah Yeoh தெரிவித்தார். ஜொகூர் இளவரசர் Tunku Mahkota Ismail கொண்டு வந்த கால்பந்து சீர்த்திருத்தங்கள் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக Hannah Yeoh தெரிவித்தார்.
தேசிய கால்பந்து அணியின் மீது மலேசியர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை மீட்டெடுக்க பல்வேறு உருமாற்றங்களைக் கொண்டு வந்தது பிரதமர் அன்வாரும் இளவரசரும் என Hannah Yeoh தெரிவித்தார். நேற்றைய வியட்னாமிற்கு எதிரான ஆட்டம் என்பது கால்பந்து ரசிகர்களை மீறி பலதரப்பட்ட மக்களுக்குத் தேசிய கால்பந்து அணியை நிரூபிக்க வேண்டிய சூழலில் தாம் இருந்ததாகவும் முக்கிய திருத்தங்களைக் கால்பந்து அணியில் மேற்கொண்டிருந்ததால் தேசிய கால்பந்து அணியின் மீதான விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் Hannah Yeoh தெரிவித்தார்.
Hannah Yeoh menyatakan kemenangan 4-0 Malaysia ke atas Vietnam dalam Piala Asia hasil usaha Tunku Mahkota Johor dan Perdana Menteri Anwar. Pembaharuan dalam bola sepak negara memulihkan keyakinan rakyat terhadap pasukan kebangsaan serta membawa perubahan positif.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *