சினேகம்' 7ஆம் ஆண்டு சாதனையின் சிகரத்தைத் தொட்ட விழா!

- Muthu Kumar
- 14 May, 2025
(ஆர்.ரமணி)
பிறை, மே 14-
மலேசியாவில் மனநலத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கும் சமூக இயக்கமாக திகழும் 'சினேகம்' சமூக இயக்கம், தனது 7ஆம் ஆண்டு நிறைவு விழாவினை பிறை சாய் லெங் பார்க்கில் அமைந்துள்ள சமூக மண்டபத்தில் கொண்டாடியது.
இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான டத்தோ டாக்டர் ஃபுலோரன்ஸ் மனோரஞ்சிதம் சின்னையா, கடந்த ஏழு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்களின் மனநிலையை மாற்றியமைக்க முன்னிலை வகித்துள்ளார். தற்கொலை மனநலப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்கும் இவ்வியக்கம், மலேசியாவின் நம்பிக்கையான சமூக ஆலோசனை இயக்கமாக சினேகம் மலேசியா விளங்குகிறது.
நிதி திரட்டும் நோக்கில், பினாங்கு மாநில வீடமைப்பு, சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு முன்னிலையில் நடைபெற்ற விருந்தோம்பல் நிகழ்வில், ஏராளமான நன்கொடையாளர்கள் தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.“இது போன்ற உண்மையான சேவைகளை வழங்க அனைவரும் முன்வர வேண்டும். நான் தொடர்ந்து சினேகம் இயக்கத்திற்கு ஆதரவு வழங்குவேன், என சுந்தரராஜு சோமு உறுதிமொழியாகக் கூறினார். இயக்கத்தின் லட்சியம்:மன உளைச்சலால் பாதிக்கப்படும் ஆண்கள். பெண்களுக்கு நம்பிக்கையும் உதவியும் வழங்குதல்.
தற்கொலை முயற்சிகளைத் தடுக்கும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகள், குடும்ப வன்முறை. விவாகரத்து, தனிமை, பொருளாதார அழுத்தம் போன்ற காரணங்களால் பாதிக்கப்படும் மக்களை மீட்டெடுப்பது போன்ற சேவைகளை வழங்குவதாக தமதுரையில் சினேகம் மலேசிய தலைவரான டத்தோ ஃபுலோரன்ஸ் மனோரஞ்சிதம் உறுதியுடன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில், பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன், டத்தோ காளீஸ்வரன். முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சொங் எங், அரசு சாரா இயக்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி வழங்கினர்.
'Sinegam Malaysia', sebuah gerakan sokongan kesihatan mental, menyambut ulang tahun ke-7 dengan majlis kutipan dana. Dipimpin oleh Datuk Dr. Florence, ia membantu mereka yang menghadapi tekanan, kemurungan, dan cubaan bunuh diri. Ramai pemimpin hadir memberi sokongan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *