குட்டியை இழந்த தாய் யானை நகர மறுத்து அடம்பிடித்த துயரம்!

- Shan Siva
- 11 May, 2025
கெரிக், மே 11: ஜாலான் கெரிக்-ஜெலி கூட்டரசு சாலையில் ஒரு லாரியில்
மோதி பலியான தனது குட்டியை விட்டு, ஐந்து மணி
நேரத்திற்கும் மேலாக வெளியேற மறுத்த தாய் யானையை வனவிலங்கு மற்றும் தேசிய
பூங்காக்கள் துறை பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவ்விடத்திலிருந்து நகர்த்தியது.
தாய் யானை
வெளியேற மறுத்து சாலைப் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால், அதிகாரிகள் மயக்க மருந்து கொடுத்து பாதுகாப்பாக
அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாலை
3.30 மணியளவில் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக பேராக் வனவிலங்கு மற்றும் தேசிய
பூங்காத்துறை இயக்குனர் யூசாஃப் ஷெரிப் தெரிவித்தார்.
காலை 11.30
மணியளவில், குட்டி யானையின் சடலத்தை
அகற்ற முடிந்தது என்று அவர் கூறினார்.
தங்களுக்கு வேறு
வழியில்லாமல் மயக்க மருந்து கொடுத்து, காலை 9 மணியளவில் நான்கு சக்கர வாகனம் மூலம் அதை மீண்டும் காட்டுக்குள்
இழுத்துச் சென்றதாக அவர் கூறினார்.
முன்னதாக,
ஒரு தாய்
யானை, லாரியின் அடியில் சிக்கிய
தனது குட்டியைப் பாதுகாத்து நிற்பதைக் காட்டும் ஒரு வீடியோ வைரலாகியது.
தாய் யானை தனது குட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் லாரியைத் தலையால் தள்ள முயற்சிக்கும் காட்சி பலரை நெகிழச் செய்தது!
Seekor ibu gajah enggan meninggalkan anaknya yang mati dilanggar lori di Jalan Gerik-Jeli selama lebih lima jam, menyebabkan pihak berkuasa menggunakan ubat pelali untuk memindahkannya. Insiden menyentuh hati itu tular apabila ibu gajah dilihat cuba menyelamatkan anaknya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *