பாறை இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடியவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்!

top-news
FREE WEBSITE AD

ஜெலி, ஜூலை 8: ஜெலி ஆற்றுப் படுகையில் பாறைகளுக்கு இடையில் சிக்கிய ஒருவரை மீட்க மீட்புப் படையினர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி மீட்டனர்.

கம்போங் குவாலா பாலா என்ற ஹுலு பாலா ஆற்றில் மீன்பிடி வலையை வீச முற்பட்ட போது, ​​சம்பந்தப்பட்ட நபரின் இடது கால் ஆற்றுப் பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டதில் பெரும் ஆபத்து நிலைக்குத் தள்ளப்பட்டார்.

நேற்று நண்பகல் நிகழ்ந்த  இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட முகமட் ஹுலுல் இஸ்மி முகமட் கமில் எனும் 31 வயது ஆடவர் மேலும் மூன்று நண்பர்களுடன் சனிக்கிழமை முதல் அப்பகுதியில் முகாமிட்டிருந்தார்.

முகமது ஹுலுலின் நண்பர்கள் அவரை விடுவிக்க முயன்றனர் ஆனால் தோல்வியடைந்தனர். பின்னர், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவியை நாடினர்

இதனை அடுத்து பத்து தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவரை விடுவிக்க சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தினர். சம்பவ இடத்தில் இருந்த கிராம மக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கூடுதல் உதவியுட அவரை  மீட்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *