வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும்! - அமைச்சு அறிவுறுத்து
- Shan Siva
- 21 Sep, 2024
கோத்தா பாரு: மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா வெளியிடும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தற்போது நாட்டைத் தாக்கும் எதிர்பாராத வானிலை மாற்றங்களைக் காண, MetMalaysia இணையதளம் வழியாக நேரடியாக தகவல்களை அணுகலாம் என்று அதன் அமைச்சர் Nik Nazmi Nik Ahmad தெரிவித்தார்.
மெட்மலேசியாவால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு எதிராக இந்த நாட்டில் உள்ள எச்சரிக்கை அமைப்புகள் எப்போதும் சிறப்பாக செயல்படுகிறது என்று அவர் கூறினார்.
எனவே, விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் பருவமழையின் மாறுதல் கட்டத்தைத் தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் ஏற்படும் எச்சரிக்கைகள் மற்றும் வானிலை மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய தீவிர வானிலை காரணமாக சுற்றுலாப் பகுதிகள், ஆற்றங்கரைகள், மலைப்பகுதிகள் மற்றும் ஆபத்தில் உள்ள பகுதிகளில் எந்தவொரு ஓய்வு நேர நடவடிக்கைகளையும் ஒத்திவைக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *