மாணவர்கள் சென்றது பல்கலைக்கழக பஸ் அல்ல! UPSI விளக்கம்

- Shan Siva
- 09 Jun, 2025
ஈப்போ: கெரிக், தாசே பண்டிங்கில் மாணவர்கள் உட்பட 15 பேரின் உயிரைப் பறித்த விபத்தில் சிக்கிய UPSi மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பல்கலைக்கழகத்தால் வாடகைக்கு விடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் சொந்த ஊரான திரெங்கானுவிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி வரும் வழியில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளதாக UPSi துணைவேந்தர் டத்தோ டாக்டர் முஹமட் அமின் முஹமட் டாஃப் தெரிவித்தார்.
ஹஜ் விடுமுறைக்குப் பிறகு பல்கலைக்கழகத்திற்குத் திரும்புவதற்காக மாணவர்களால் தனிப்பட்ட முயற்சியாக இந்தப் பேருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அதிகாரப்பூர்வ UPSI பேருந்தோ அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விரைவுப் பேருந்தோ அல்ல என்று அவர் கூறினார்.
இது மாணவர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாகும், அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து திரும்புவதற்கு குழு போக்குவரத்தை தாங்களாகவே ஏற்பாடு செய்வது வழக்கம் என்று அவர் கூறினார்.
Sebanyak 15 nyawa terkorban dalam kemalangan bas yang membawa pelajar UPSI dari Gerik ke Tasik. Bas tersebut bukan milik universiti. Pelajar secara sendiri menyewa bas untuk pulang dari kampung ke universiti selepas cuti Haji, menurut Timbalan Naib Canselor UPSI.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *