HFMD நோயால் 12 மாணவர்கள் பாதிப்பு! மூடப்படும் பள்ளி!

top-news
FREE WEBSITE AD

நெகிரி செம்பிலான் BAHAU பகுதியில் உள்ள சீனத் தொடக்கப்பள்ளியில் HFMD நோயால் 12 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளியை நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வி இலாகாவின் இயக்குநர் Datuk Dr Roslan Hussin மூடும்படி உத்தரவிட்டார். 419 மாணவர்கள் பயிலும் அப்பள்ளியில் 12 மாணவர்களுக்கு வாய், கை கால்களில் புண்கள் ஏற்படும் அரிய வகை நோயால் சிறார்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை பள்ளிகளில் இந்நோயின் தாக்கம் இருந்ததாக அறியப்படாத நிலையில் சம்மந்தபட்ட பள்ளியை அடுத்த அறிவிப்பு வரும் வரையில் மூடப்படுகிறது.

தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் பள்ளியை முழுமையாகச் சோதனைக்குற்பட்ட பின்னர், மீண்டும் பள்ளி வழக்க நிலைக்குத் திரும்பும் என நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வி இலாகாவின் இயக்குநர் Datuk Dr Roslan Hussin தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *