மோட்டார் சைக்கிளை மோதிய வாகனம்! தம்பதியர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 11 May, 2025
மே 11,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் JALAN DUTA அருகே மோட்டார் சைக்கிளை மோதிய வாகனம் நிறுத்தாமல் செல்லும்படியானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியது. இச்சம்பவம் பிற்பகல் 2.30 மணிக்கு நிகழ்ந்ததாகவும் விபத்துக்குக் காரணமான 32 வயது Nissan Navara வாகனமோட்டிக் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் கோலாலம்பூர் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறை உதவி இயக்குநர் Mohd. Zamzuri Mohd. Isa தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 53 வயது மோட்டார் சைக்கிளோட்டியும் 49 வயது அவரின் மனைவியும் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, விபத்துக் குறித்து தமக்கு தெரியாது என்றும் விபத்தை ஏற்படுத்தியதைத் தாம் உணர்ந்திருந்தால் நிச்சயம் வாகனத்தை நிறுத்தி விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவியிருப்பேன் என்றும் சம்மந்தப்பட்ட காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியதைத் தொடர்ந்து தாம் உணர்ந்துள்ளதாகவும் விபத்துக்குக் காரணமான 32 வயது Nissan Navara வாகனமோட்டிக் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Sepasang suami isteri cedera parah selepas motosikal mereka dirempuh Nissan Navara di Lebuhraya PLUS berhampiran Plaza Tol Duta. Mangsa dihantar ke Hospital Sungai Buloh. Pemandu kenderaan ditahan reman dua hari untuk siasatan di bawah Akta Pengangkutan Jalan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *