ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருந்த மூவர் கைது!

top-news
FREE WEBSITE AD


ஈப்போ, ஜூன் 22: ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் போலீஸ் உபகரணங்களை வைத்திருந்ததற்காக மூன்று பேர் கைது செய்யப்பட்டதன் மூலம் ஈப்போவில் நடந்த பல கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போலிஸ் ஆள்மாறாட்ட வழக்குகளைத் தீர்த்துவிட்டதாக போலீஸார் நம்புகிறார்கள்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 21) காலை 6.10 மணியளவில் சுங்கை சேனம் பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர்  உதவி ஆணையர் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார்.

அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாகனம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.

ஆரம்பக்கட்ட சிறுநீர் பரிசோதனையில் 27 முதல் 37 வயதுக்குட்பட்ட மூவருக்கும் மெத்தாம்பெத்தமைன் மற்றும் ஆம்பெத்தமைன்  இருப்பது கண்டறியப்பட்டது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மூவருக்கும் முன்னர் கிரிமினல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் இருப்பதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *