GISBH நிறுவனத்துடன் தொடர்புடைய மூவர் மீது இன்று நீதிமன்றத்தில் பாலியல் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 19: குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங்ஸ் (GISBH) நிறுவனத்துடன் தொடர்புடைய மூவர் மீது இன்று சிரம்பானில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக மொத்தம் 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஹபீப் நோ ஜைரி (21), குனைஸ் ஃபாத்தி காபில் (20) மற்றும் அஹ்மத் நட்ஸ்ஃபுல் இஷாம் அஜிசன் (22) ஆகியோர் மீது நீதிபதி சுரிதா புடின் முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.

நெகிரி செம்பிலானில் உள்ள கோல பிலாவில் உள்ள ஒரு மதப் பள்ளியில் இக்குற்றங்களைச் செய்ததாக மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (a) இன் கீழ் பாலியல் நோக்கங்களுக்காக ஒரு குழந்தையின் உடலைத் தொட்டதற்காகவும், அதே சட்டத்தின் பிரிவு 14 (b) இன் கீழ் பாலியல் நோக்கத்திற்காக ஒரு குழந்தையை மற்றொருவரின் உடலைத் தொடச் செய்ததற்காகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி கிடைக்க வைகை செய்யும்.

வழக்கை மீண்டும் செவிமடுக்கவும், மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்தல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர்களை நியமிக்கவும் அக்டோபர் 30 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *