போதைப்பொருளுடன் ஆயுதங்களை வைத்திருந்த இளைஞருக்குச் சிறையும் பிரம்படியும்!

- Sangeetha K Loganathan
- 05 Jun, 2025
ஜூன் 5,
தொடர்ந்து பல்வேறுக் குற்றங்களில் ஈடுபட்ட 31 வயது உள்ளூர் ஆடவருக்கு இன்று மூவார் Sesyen நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் 4 பிரம்படிகளையும் விதித்து தீர்ப்பளித்தது. ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டியது போதைப்பொருள் பயன்படுத்தியது கைகலப்பில் ஈடுபட்டது என 31 வயது இளைஞரான Muhamad Shukri Rahmad தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட பின்னர் நீதிபதி Sayani Mohd Nor இந்த தீர்ப்பை வழங்கினார்.
கடந்த மே 34 Jalan Sungai Abong சாலையில் 33 வயது இளைஞரை 90 செண்டி மீட்டர் நீளமுள்ள சாமூராய் கத்தியைக் காட்டி மிரட்டியதாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில் முதற்கட்ட விசாரணையில் அவர் முன்னமே பல்வேறு குற்றங்களுக்குத் தேடப்பட்டு வந்ததையும் கண்டறிந்தனர். Muhamad Shukri Rahmad எனும் வேலையில்லாத ஆடவர் கைது செய்யப்பட்ட போது amphetamine, methamphetamine என இரு வகையிலானப் போதைப்பொருளைப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. மேலும் சிறை தண்டனைக்குப் பின்னர் 2 ஆண்டுகள் காவல் அதிகாரிகளின் மேல்பார்வையில் அவர் இருக்கவும் மூவார் Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டது.
Seorang lelaki tempatan berusia 31 tahun dijatuhi hukuman 12 tahun penjara dan 4 sebatan oleh Mahkamah Sesyen Muar selepas mengaku bersalah atas pelbagai kesalahan termasuk memiliki senjata, dadah dan mengugut orang awam menggunakan pedang samurai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *