கேளிக்கை மையத்தில் 188 வெளிநாட்டிநர் கைது!

- Sangeetha K Loganathan
- 12 Jun, 2025
ஜூன் 12,
தலைநகரில் உள்ள கோளிக்கை மையத்திலிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 188 வெளிநாட்டினர்களைத் தேசியக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது, அதிகாலை சிலாங்கூர் Puduவில் இச்சோதனை நடவடிக்க்கை மேற்கொண்டதாகவும் பாலியல் தொழில் சேவைகளை வழங்கியதாக நம்பப்படும் வெளிநாட்டுப் பெண்களுடன் மொத்த 188 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணிக்குத் தொடங்கிய இச்சோதனை நடவடிக்கை அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்ததாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
128 ஆண்களையும் 116 பெண்களையும் சோதனையிட்டதில் 106 ஆண்களும் 79 பெண்களுக்கும் கம்போடியாவைச் சேர்ந்த இருவரும் என மொத்தம் 188 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் 21 வயதிலிருந்து 35 வயதுக்குற்பட்டவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சோதனையின் போது பெருமளவிலான வெளிநாட்டினர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
Sebanyak 188 warga asing berusia 21 hingga 35 tahun ditahan dalam serbuan Jabatan Imigresen di pusat hiburan di Pudu, Selangor. Mereka dipercayai terlibat dalam aktiviti pelacuran dan kebanyakan tiada dokumen sah. Serbuan berlangsung dari 11 malam hingga 5 pagi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *