சித்ரா பௌர்ணமியில் இந்து சங்கம் அர்ச்சனைத் தட்டு விற்பனை!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

தெலுக் இந்தான், மே 12-

மலேசிய இந்து சங்கம், தெலுக் இந்தான் வட்டாரப் பேரவையினர் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் இரண்டாவது ஆண்டாக அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள தற்காலிகக் கடைகளில் அர்ச்சனைத் தட்டு 10 வெள்ளி என விற்பனை செய்யப்படுகிறது என்றும் தலைவர் முனியாண்டி இராஜகோபால் தெரிவித்தார்.

கடந்த (2024)/ஆண்டு நடந்த அர்ச்சனைத் தட்டு விற்பனை மூலம் ரிம7,000 (செலவுகள் போக) கிடைக்கப்பெற்றோம். அது போன்று இந்த ஆண்டு (2025) ரிம10,000 கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இதன் மூலமாகவும், பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சுலிங்கம் மற்றும் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஙா கோர் மிங் இவர்கள் வழங்கி வரும் நிதிகளும் வட்டார தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் அளிக்கப்படுகிறது.

தவிர, உயர்கல்விக் கூடங்களில் இடம் கிடைக்கப் பெற்று உள்ளவர்களுக்கு கட்டண உதவி தேவைப்படுவோருக்கு உதவுதல், வட்டார தமிழப்பள்ளிகளில் இலவசமாக சமய வகுப்பு நடத்துதல், எஸ்டிபிஎம் மற்றும் எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்கு மலாயா பல்கலைக்கழகம் இணை ஆதரவுடன் உயர்கல்விக்கூட வழிகாட்டி கருத்தரங்குகள் நடத்துதல் போன்று நம் மாணவர்களுக்கு கல்வி சார்ந்த தேவைகளை சமாளிக்கவே வட்டார இந்து சங்கம் நற்காரியங்கள் முன்னெடுத்து வருகிறது என்றார்.

அடுத்த திட்டம் என்பது தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் பொருளாதார வசதியற்ற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேன் (மூடுந்து) மூலம் குறைந்த கட்டணத்தில் பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் சேவையினை வழங்கிடவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. வசதி குறைந்த மாணவர்களின் பெயர் பட்டியிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் வழங்கி வருகின்றனர். அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 200 மாணவர்கள் நிதி உதவி பெற்றுள்ளனர்.

அந்த வகையில், நம் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும்போது வசதி குறைந்த மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்தைக் காண வேண்டும் என்றும், அவர்களும் கல்வியில் பின்தங்கிவிடக்கூடாது என்னும் நோக்கில் தெலுக் இந்தான் வட்டார இந்து சங்கத்தின் மூலம் இந்தக் கல்வி உதவி நிதி வழங்கப்படுகிறது.

ஒவ்வோர் அர்ச்சனைத் தட்டின் பின்னால் ஒரு தமிழ்ப்பள்ளி மாணவர் இருக்கின்றார் என்பதை சிந்தையில் வைத்து சித்ரா பௌர்ணமிக்கு எங்களிடம் அர்ச்சனைத் தட்டுகள் வாங்கி ஏழை மாணவர்களுக்கு உதவி கரம் நீட்டுங்கள் என்றும் முனியாண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

Di Teluk Indah, Persatuan Hindu Malaysia telah menjual piring arca di kuil Arulmigu Sendayuthapani pada Festival Chitra Pournami, yang diadakan untuk tahun kedua. Hasil jualan piring pada tahun sebelumnya sebanyak RM7,000 digunakan untuk membantu pelajar India di sekolah rendah dan menyediakan bantuan pendidikan untuk pelajar dari keluarga kurang mampu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *