சிங்கப்பூரின் புதிய பிரதமர் மலேசியா வருகை!

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், ஜூன் 12: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று மலேசியா வந்தடைந்தார்.

அவர் தனது பிரதிநிதிகளுடன் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1 க்கு நேற்று இரவு 8.50 மணிக்கு வந்தடைந்த அவரை, வெளியுறவு அமைச்சின் நெறிமுறைத் தலைவர் முகமட் ஐனி அதான் வரவேற்றார்.

மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வானு கோபால மேனனும் உடன் இருந்தார்.

வோங், அவரது மனைவி லூ டிஸே லூயியுடன், கேப்டன் ஆடம் அஸ்மானின் தலைமையில் முதல் பட்டாலியன் ராயல் ரேஞ்சர் படைப்பிரிவின் மரியாதையை ஏற்றுகொண்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் வோங்கின் இந்த வருகை அமைந்துள்ளது. சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக மே 15 அன்று பதவியேற்ற பிறகு, மலேசியா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கான வோங்கின் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது

அவரது குழுவில் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் சுகாதாரத் துறை இணை அமைச்சர் ரஹாயு மஹ்ஜாம் ஆகியோரும் வருகை புரிந்துள்ளனர்.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக அன்வாருடன் வோங் சந்திப்பை நடத்த உள்ளார்.

துணைப் பிரதமர்கள் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் ஃபதில்லா யூசோப் ஆகியோரையும் அவர் சந்திக்க உள்ளார்.

2023 இல், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் இரண்டாவது பெரிய உலகளாவிய வர்த்தக பங்காளிகளாக இருந்தன. ஆசியான் நாடுகளில் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக சிங்கப்பூர் இருப்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *