சிங்கப்பூர் பயண ஏஜென்சிகளின் கட்டண உயர்வு... நமது மானியம் சுரண்டப்பட்டதற்கான சான்று! - பிரதமர் விளக்கம்
- Shan Siva
- 18 Jun, 2024
பட்டர்வொர்த், ஜூன் 18: சிங்கப்பூர் பயண ஏஜென்சிகளின் கட்டண உயர்வு, அவர்கள் நீண்டகாலமாக மலேசிய டீசல் மானியத்தை
நம்பியிருப்பதைக் காட்டுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
இன்று புக்கிட் மெர்தாஜாமில் உள்ள Jamek Cerok Tokun Bawah மசூதியில் நடைபெற்ற Aidiladha Korban Perdana விழாவில் பேசிய
அன்வார், நிதி முறைகேடுகளைத் தவிர்க்க டீசல் மானிய முறையை மறுபரிசீலனை
செய்ய வேண்டும் என்றார்.
டீசல் மானியம் இழப்பைத்
தொடர்ந்து சிங்கப்பூர் சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள்
அவற்றின் விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன. பல ஆண்டுகளாக வெளிநாட்டு நிறுவனங்கள்
மற்றும் தாய்லாந்து மீன்பிடிப் படகுகளால் நமது மானியங்கள் எவ்வாறு
சுரண்டப்பட்டுள்ளன என்பதை இது வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
3.8 மில்லியன்
வெளிநாட்டினர் கவனக்குறைவாக இந்த மானியம் வழி பயனடைந்துள்ளதாகவும், தாய்லாந்திற்கு டீசல் ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு மீன்பிடி
படகுகள் பயன்படுத்தப்படுவதாகவும் அன்வார் சுட்டிக்காட்டினார்.
இது மலேசிய வரி
செலுத்துவோரின் பணம். இதன் மூலம் வெளிநாட்டினர் பயன் பெறுகின்றனர். 2012 முதல்
2020 வரை, வெளிநாட்டு நுகர்வு காரணமாக உயர்ந்து வரும் டீசல் நுகர்வுடன்
ஒப்பிடுகையில், கார்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்று அவர் கூறினார்.
டீசல்
மானியத்தை சீரமைப்புச் செய்வது என்பது, மானியத்தை மிகவும்
திறம்பட நிர்வகிப்பதற்கும், முறைகேடுகளைத் தடுப்பதற்கும், இலக்கு
வைக்கப்பட்ட பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது
முக்கிய நோக்கம் மானியக் கசிவைத் தடுத்து, சேமிப்பை பரந்த
மக்களுக்கு மறுபகிர்வு செய்வதாகும் என்று அன்வார் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *