ஜொகூர் மாநில டெங்கிக்காய்ச்சல் நிலவரம் குறித்து லிங் தியான் சூன் அறிவிப்பு!

- Muthu Kumar
- 14 May, 2025
(கோகி கருணாநிதி)
ஜொகூர்பாரு,
ஜொகூர் மாநிலத்தில் டெங்கிக்காய்ச்சல் நோய்த்தாக்கம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 61.3% குறைந்துள்ளதாக மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆணையத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டின் 19ஆவது தொற்றுநோய் வாரத்தின் முடிவில் மொத்தமாக 2,446 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 797 சம்பவங்கள் தொற்று பரவும் பகுதிகளில் இருந்தும், 1,649 சம்பவங்கள் பரவாத பகுதிகளில் இருந்தும் வந்துள்ளன.
அதே வாரத்தில் மட்டும் 147 புதிய டெங்கிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகின. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 14ரூ குறைவாகும். மிக அதிகமான சம்பவங்கள் ஜொகூர் பாரு (113), (14), மூவார் (5) உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்துள்ளன.
இதே வாரத்தில் மட்டும் 18 புதிய தொற்று பகுதிகள் காணப்பட்டுள்ளன.இவை பெரும்பாலானவை ஜொகூர் பாரு மாவட்டத்தைச் சேர்ந்தவை.
மேலும், டெங்கியால் மரணம் நிகழவில்லை என்றும், இதுவரை பதிவான நான்கு மரணங்கள் 2024 இன் ஒப்பீட்டில் 50ரூ குறைவாகும் என்றும் தெரிவித்தார்.
மக்களுக்கு அவர்களது வீடுகளில் 10 நிமிடங்கள் ஒதுக்கி தண்ணீர்தங்கும் பொருட்களை சுத்தம் செய்யும் பழக்கத்தை வளர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதுவரை மொத்தம் வெ.1.25 மில்லியன் மதிப்பிலான 2,508 சம்மன்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், மாநிலத்தில் கை, கால் மற்றும் வாய்மூல நோயான HFMD சம்பவங்கள் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே அதிகரித்துள்ளதாகவும், 19ஆவது வாரத்தில் 1,964 சம்பவங்கள் பதிவாகி, மொத்தமாக 13,415 சம்பவங்களுக்குச் சென்று விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதில் பெரும்பாலான பாதிப்புகள் (80.3%) 6 வயதுக்குட்பட்ட சிறார்களிடையே காணப்படுகிறது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த, குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில சுகாதாரத்துறை. MySejahtera 'Infectious Disease Tracker வசதியையும் செயல்படுத்தியுள்ளது. இது பொதுமக்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை நிச்சயமாகவும் பாதுகாப்பாகவும் திட்டமிட உதவியாக இருக்கும் என லிங் தியான் சூன் குறிப்பிட்டார்.
Kes demam denggi di Johor menurun 61.3% berbanding tahun lalu, dengan 2,446 kes dilaporkan hingga minggu ke-19. Tiada kematian baharu berlaku. HFMD pula meningkat, melibatkan 13,415 kes, majoritinya kanak-kanak bawah enam tahun. Langkah kawalan dan kesedaran diteruskan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *