பள்ளியில் நள்ளிரவில் தீ!

- Shan Siva
- 23 Jun, 2024
கோத்தா கினாபாலு, ஜூன் 23: சபாவின் கிழக்கு கடற்கரை தவாவ் மாவட்டத்தில் உள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் நேற்று சனிக்கிழமை (ஜூன் 22) நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.
இன்று அதிகாலை 1.20 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து 10 நிமிடங்களுக்குப் பிறகு அணைத்தனர், என்றார்.
நள்ளிரவு 12.06 மணிக்கு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.
சபா கல்வி இயக்குனர் டத்தோ ரைசின் சைடின், இந்த ச்சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், பள்ளியில் பாடங்கள் பாதிக்கப்படாமல் இருக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
தேவையான தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *