இயக்குநர் விஜயசிங்கம் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 12: தன் இயக்கத்தினாலும், நடிப்பினாலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீது கொண்ட பேரன்பினாலும் கலைத்துறையில் தனித்துவம் மிக்கவராய் திகழ்ந்த நாட்டின் மூத்த கலைஞர் விஜயசிங்கம் தமது 78 வது வயதில் காலமானார்.

அவர் காலமானதை  குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.

நாட்டின் கலை வரலாற்றில் முக்கிய இடம்பெற்றவர் விஜய சிங்கம். பல முன்னணி நடசத்திரங்களை, இயக்குநர்களை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் பயணம் செய்தவர்.

இவரின் எண்ணற்றப் படைப்புகள்
டெலிமூவி தொடர்கள், தீபாவளி, பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளாக நம் பண்பாட்டு அடையாளங்களாய் ஆவணமாகின.

13 உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இவர் 53 டெலி மூவிகளை இயக்கியுள்ளார்.

1963ஆம் ஆண்டிலிருந்து நடிக்கத் தொடங்கிய இவர் எண்ணற்றக் காதாப்பாத்திரங்களில் தனி முத்திரை பதித்தார்.

நடிகர் திலகம் சிவாஜி  கணேசன் மீதான ஈர்ப்பால் 2001ஆம் ஆண்டு மலேசிய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தைத் தோற்றுவித்தார். அதன் தலைவராக இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு 'தமிழ் மலர்' குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *