ஏர் இந்தியா விமான விபத்து, மலேசியா இரங்கல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 13-

இந்தியா, அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானம் 171 விபத்துக்குள்ளானது குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்.

"இந்த துயரச் சம்பவத்தை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். மலேசிய அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக, பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அவர் முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தியாவின் துயரத்தை மலேசியா பகிர்ந்து கொள்வதோடு அவர்களுடன் உறுதியாக நிற்பதாகவும் பிரதமர் கூறினார். நேற்று குஜராத்,அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனை நோக்கி புறப்பட்ட விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அருகிலுள்ள மெகானி எனும் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அவ்விமானத்தில் மலேசியர்கள் யாரும் பயணிக்கவில்லை என்பதை விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியது.

Perdana Menteri Anwar Ibrahim merakamkan ucapan takziah atas nahas pesawat Air India 171 di Ahmedabad, India. Beliau menyatakan simpati kepada keluarga mangsa dan menegaskan Malaysia berdiri teguh bersama India. Tiada rakyat Malaysia terlibat dalam kejadian tersebut.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *