மின்கம்பத்தைத் தொட்ட சிறுவனுக்குத் தீக்காயம்! -நகராண்மைக் கழகம் மன்னிப்பு!

- Sangeetha K Loganathan
- 06 Jun, 2025
ஜூன் 6,
முறையாகப் பாதுகாக்கப்படாத மின்கம்பதைத் தொட்டதாக நம்பப்படும் சிறுவனை மின்சாரம் தாக்கியதில் தீக்கயத்திற்குள்ளானான். இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியதும் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்பதாகவும் சம்மந்தப்பட்ட மின்கம்பம் பராமரிக்கப்படுவதாகவும் கோலா திரங்கானு மேயர் Datuk Jusman Ibrahim நம்பிக்கை அளித்தார். இச்சம்பவம் இரவு 11.18 மணிக்கு நிகழ்ந்ததாகத் தெரிய வந்துள்ளது,
சம்மந்தப்பட்ட மின்கம்பம் பழுதடைந்திருந்த நிலையில் அதன் கேபிள்கள் வெளியே இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுவன் மின்கம்பத்துடன் கேபிளைத் தொட்டதால் மின்சாரம் தாக்கிய கடுமையானத் தீக்காயத்திற்குள்ளானதாகவும் தற்போது திரங்கானு Sultanah Nur Zahirah (HSNZ) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கோலா திரங்கானுவில் உள்ள மின்கம்பங்களை மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கோலா திரங்கானு மேயர் Datuk Jusman Ibrahim தெரிவித்தார்.
Seorang kanak-kanak cedera akibat terkena renjatan elektrik selepas menyentuh kabel dari tiang elektrik rosak di Kuala Terengganu. Majlis Bandaraya memohon maaf dan mengarahkan siasatan serta penyelenggaraan semula semua tiang elektrik di kawasan itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *