தீயில் கருகிய கப்பல்! – கிள்ளான்

- Sangeetha K Loganathan
- 13 May, 2025
மே 13,
பராமரிப்புப் பணிகளுக்காகக் கிள்ளான் துறைமுகத்தின் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் திடீரென தீயில் கருகியது. காலை 11.45 மணிக்குத் தீ விபத்துக் குறித்து கிள்ளான் தீயணைப்பு ஆணையத்திற்கு அவசர அழைப்புக் கிடைத்ததும் 22 தீயணைப்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கிள்ளான் மாவட்டத் தீயணைப்பு ஆணையத்தின் தளபதி Iffan Abdul Gani தெரிவித்தார்.
பழுதடைந்த கப்பலைக் கரியோரம் நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது வெல்டிங் துகள்கள் பரவி தீ ஏற்பட்டதாக Iffan Abdul Gani தெரிவித்தார். தீ பரவியது பழுது பார்க்கும் பணியிலிருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பானப் பகுதிக்கு விரைந்ததாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக Iffan Abdul Gani தெரிவித்தார்.
Sebuah kapal yang diletakkan di tepi pelabuhan Klang untuk kerja penyelenggaraan terbakar akibat percikan semasa kerja kimpalan. Tiada kecederaan dilaporkan dan api berjaya dikawal sepenuhnya oleh 22 anggota bomba yang dikejarkan ke lokasi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *