தீயில் கருகிய பள்ளிக் கட்டிடம் விரைந்து சீரமைக்கபடும்! – கல்வி அமைச்சர் உறுதி!

top-news

ஜூன் 10,

செராஸில் உள்ள SM Sains Alam Shah இடைநிலைப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை முழுமையாக விசாரிக்க கல்வி அமைச்சு சிறப்பு நடவடிக்கைக் குழுவைக் கொண்டிருப்பதாகக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek உறுதியளித்தார். இன்று அதிகாலை 4.35 மணிக்கு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களும் பாதிக்கப்படவில்லை என்றும் Fadhlina Sidek விளக்கமளித்தார்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைத் தடவியல் நிபுணர்களுடன் தீயணைப்பு ஆணையமும் ஆராய்ந்து வரும் நிலையில் மறுசீரமைப்பிற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்றும் இதனால் கற்றல் கற்பித்தல் தடையின்றி தொடர்வதையும் கல்வி அமைச்சு உறுதி செய்யும் என Fadhlina Sidek உறுதியளித்தார். பள்ளியின் முக்கிய ஆவணங்களில் ஏற்பட்டிருக்கும் சேதம் குறித்தான ஆய்வுகளைக் கல்வி அமைச்சின் சிறப்பு நடவடிக்கைக் குழு ஆராய்ந்து வருவதாகக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek விளக்கமளித்தார்.

Kementerian Pendidikan menubuhkan pasukan khas bagi menyiasat kebakaran di SM Sains Alam Shah, Cheras. Menteri Pendidikan Fadhlina Sidek memberi jaminan kerja baik pulih akan dipercepatkan agar sesi pembelajaran tidak terganggu. Tiada kecederaan dilaporkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *