தெலுக் இந்தான் FRU லாரியை மோதிய ஓட்டுநர் மீது போதைப்பொருள் வழக்கு!

top-news

மே 13,

இன்று காலை தெலுக் இந்தானில் சிறப்புக் காவல் படையான FRU 5 சிறப்புப் படையினர் பயணித்த லாரியை மோதி விபத்தை ஏற்படுத்திய மணல் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநர் மீது போதைப்பொருள் வழக்குகள் உட்பட 6 முந்தைய வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் பேராக் மாநிலக் காவல்துறைத் தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக லாரி ஓட்டும் அனுபவம் கொண்ட 45 வயதான மணல் லாரி ஓட்டுநர் மீது பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதற்கான வழக்குகள் இருப்பதை முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக Datuk Noor Hisam Nordin தெரிவித்தார். இன்று மாலை 4 மணி நிலவரப்படி 9 காவல் அதிகாரி உயிரிழந்திருப்பதை Datuk Noor Hisam Nordin உறுதிப்படுத்தினார். பலியான அதிகாரிகளின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் இரவு 8 மணிக்கு அவர்களின் உடல் ஹிலிர் பேராக் மாவட்டக் காவல் நிலையத்தில் இறுதி அஞ்சலிக்காகப் பொதுமக்கள் பார்வையில் வைக்கப்படும் என Datuk Noor Hisam Nordin தெரிவித்தார்.

Pemandu lori pasir yang melanggar lori FRU di Teluk Intan ditahan polis selepas disahkan mempunyai enam rekod jenayah lampau termasuk kes dadah. Nahas itu meragut sembilan nyawa anggota FRU, dan siasatan lanjut masih dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *