கைப்பேசியைப் பார்த்துக்கொண்டே எதிரில் வந்த வாகனத்தை மோதிய ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 08 Jun, 2025
ஜூன் 8,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த வாகனத்தை மோதும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து விபத்தை ஏற்படுத்திய ஆடவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். மாலை 5 மணியளவில் குளுவாங்கில் உள்ள Jalan Jaya குடியிருப்புப் பகுதியில் உள்ள சாலையில் எதிர்திசையில் வந்த Proton Saga வாகனத்தை Honda City வாகனம் மோதியதாகவும் 40 வயதுள்ள Honda City வாகனமோட்டிக் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 40 வயது Honda City வாகனமோட்டி கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டே வாகனத்தைச் செலுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் முதற்கட்ட சோதனையில் 40 வயது ஆடவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிச் செய்யப்பட்டதும் மாலை 6.30 மணிக்கு அவரைத் தடுப்புக் காவலில் கைது செய்திருப்பதாகவும் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். இந்த விபத்தால் பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டியும் அவரின் நண்பரும் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதாகவும் 36 வயதான Proton Saga வாகனமோட்டி காயங்களின்றி தப்பியதாகவும் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
Kejadian kemalangan akibat pemandu menggunakan telefon bimbit ketika memandu menyebabkan dua cedera ringan dan seorang pemandu ditahan. Lelaki berusia 40 tahun itu juga didapati positif dadah dalam ujian awal, menurut polis Kluang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *