விபத்தில் தந்தை பலி! மகள் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 06 Jun, 2025
ஜூன் 6,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து விலகி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 56 வயது ஆடவர் உயிரிழந்ததுடன் அவருடன் பயணித்த 19 வயது இளம்பெண் படுகாயம் அடைந்தார். நேற்றிரவு LTU நெடுஞ்சாலையின் CHEGAR PERAH சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக LIPIS மாவட்டக் காவல் ஆணையர் MOHD RUZI MOH YUSOF தெரிவித்தார்.
பெருநாள் விடுமுறைக்காக 19 வயது மகளைப் பல்கலைக்கழகத்திலிருந்து TANAH MERAHவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக LIPIS மாவட்டக் காவல் ஆணையர் MOHD RUZI MOH YUSOF தெரிவித்தார். படுகாயம் அடைந்த 19 வயது பல்கலைக்கழக மாணவி Lipis மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையை மேற்கொள்வதாகவும் LIPIS மாவட்டக் காவல் ஆணையர் MOHD RUZI MOH YUSOF தெரிவித்தார்.
Seorang lelaki berusia 56 tahun maut manakala anak perempuannya cedera parah selepas kenderaan mereka terbabas ke dalam kanal di Chegar Perah, Lipis. Mereka dalam perjalanan pulang ke Tanah Merah sempena cuti perayaan. Mangsa dirawat di Hospital Lipis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *