சீன மாணவர்களுக்கு மலாய் மொழி ஆளுமை இல்லையா? - ஆதாரமற்ற குற்றச்சாட்டு! - கல்வி துணை அமைச்சர் Wong Kah Woh
- Thina S
- 13 Sep, 2024
சீன இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேசிய மொழியில் பின் தங்கிய நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கும் கருத்தில் எந்தவோர் ஆதாரமும் இல்லை என கல்வி அமைச்சின் துணை அமைச்சர் Wong Kah Woh தெரிவித்தார். தாய்மொழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கானத் தேசிய மொழி பாடத்திட்டங்கள் குறித்தான ஆய்வுகள் நிலுவையில் இருப்பதை அவர் நினைவூட்டினார்.
தாய்மொழிப் பள்ளிகளிகளில் பயிலும் மலாய்க்காரர் அல்லாத மாணவர்கள் தேசிய மொழியில் பின்தங்கியிருப்பதாகவும் குறிப்பாகச் சீன இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மலாய் மொழியில் புலமையில்லை என குற்றம். சுமத்துவது பொறுப்பற்ற தன்மை என்றும் சம்மந்தப்பட்ட நபர்கள், முறையான ஆய்வுகளற்ற கருத்துகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என துணை அமைச்சர் Wong Kah Woh வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *