2,225 இந்தியர்களுக்கு RM 32.55 மில்லியன்! Datuk Ramanan பெருமிதம்!

top-news
FREE WEBSITE AD

கடந்த 5 மாதங்களில் தொழில்முனைவோர் கூட்டுறவு அமைச்சின் மூலமாக 2,225 இந்தியர்களுக்கு RM 32.55 மில்லியன் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகத் துணை அமைச்சர் Datuk Ramanan தெரிவித்தார். 

இந்தியர்களில் பலரும் முதல் நிதி இல்லாமல் வணிகம் தொடங்க முடியாததால் முடங்கியிருப்பதால் அவர்கள் வணிகம் தொடங்க முதற்கட்டமாகத் தொழில்முனைவோர் கூட்டுறவு அமைச்சு செயல்பட்டு வருவதாக அதன் துணை அமைச்சர் Datuk Ramanan தெரிவித்தார். 

Tekun, Amanah Iktiar போன்ற நிதி காப்பீடுகளைப் பெறுவதற்கு தொழில்முனைவர்கள் தங்களின் வணிகத்தைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்தியர்களில் பலரும் வணிகத் திறன்மிக்கவர்களாக இருந்தாலும் முதல்பணம் இல்லாததால் வணிகம் தொடங்க சிக்கலை எதிர்நோக்கியிருக்கின்றனர். அச்சிக்கலை உடனடியாகத் தீர்க்க தமது அமைச்சு துணையிருக்கும் என Datuk Ramanan நம்பிக்கை அளித்தார். 

தெக்குன் ‘SPUMI’  வாயிலாக, கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 31 மே 2024 வரை 29,136 இந்திய தொழில்முனைவோர்களுக்கு RM457.7 மில்லியன் கடனுதவி வழங்கப்பட்டிருப்பதையும் அவர் மேற்கோள் காட்டினார்.

புதிதாய் அறிமுகம் கண்ட ஏ.ஐ.எம் – பெண் திட்டத்தின் வழி, இதுவரை 1,347 இந்தியப் பெண் தொழில்முனைவோர்களுக்கு 10.85 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், பேங்க் ராக்யாட் பிரிஃப்-ஐ திட்டத்தின் கீழ் 43 பேருக்கு 3.8 மில்லியன் கடனுதவி அங்கீகரிக்கபட்டுள்ளதாகவும் டத்தோ ரமணன் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

 இந்தியத் தொழில்முனைவோர்களை உருவாக்குவதிலும் முன்னேற்றுவதிலும்  தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சு முழுமையாக ஈடுபடும் என  டத்தோக் ரமணன் நம்பிக்கை அளித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *