சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட மனநலன் பாதிக்கப்பட்ட ஆடவர்!

- Sangeetha K Loganathan
- 10 Jun, 2025
ஜூன் 10,
கடந்த ஜூன் 2 ஆம் திகதி முதல் காணாமல் போனதாகக் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்து மனநலன் பாதிக்கப்பட்ட ஆடவரின் உடல் நேற்று காலை 10.20 மணிக்கு Taman Sri Embun பகுதியில் உள்ள அடர்ந்த புதரிலிருந்து இறந்த நிலையில் மீட்கப்பட்டது. Taman Sri Embun குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 36 வயதான Sabri Ismail எனும் ஆடவரைக் காணவில்லை என அவரின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கடந்த ஜூன் 2 ஆம் நாள் முதல் தேடுதல் பணியை மேற்கொண்டு வந்ததாகப் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.
காணாமல் போன 36 வயதான Sabri Ismail எனும் ஆடவரின் உடல் Taman Sri Embun குடியிருப்புப் பகுதியிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலுள்ள புதரிலிருந்து காவல் அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டதாகவும் மேலதிக விசாரணைக்காக அவரின் உடல் Jerantut மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். சடலம் கிடைக்க பெற்ற புதரிலிருந்து எந்தவொரு குற்றவியல் சம்பவங்களுக்கான ஆதாரமும் கிடைக்கபெறவில்லை என பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.
Lelaki berusia 36 tahun yang dilaporkan hilang sejak 2 Jun lalu ditemui maut dalam semak berhampiran Taman Sri Embun. Mangsa yang mengalami masalah kesihatan mental dikenali sebagai Sabri Ismail. Polis tidak menemui unsur jenayah di lokasi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *