நீர்வீழ்ச்சியில் மூழ்கிய இருவர்! சிறுமி மீட்பு! இளம்பெண் பலி!

- Sangeetha K Loganathan
- 10 Jun, 2025
ஜுன் 10,
நண்பர்களுடன் Wong Ruan நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென 14 வயது சிறுமியும் 20 வயது இளம்பெண்ணும் நீரில் மூழ்கியதில் 20 வயது இளம்பெண் உயிரிழந்தார். நீரில் மூழ்கிய 14 வயது சிறுமி பொதுமக்களால் மீட்கப்பட்டதாகச் சரவாக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Alffian Sahma தெரிவித்தார். சரவாக் SARIKEI பகுதியில் உள்ள பிரபலமானச் சுற்றுலா தலமான Wong Ruan நீர்வீழ்ச்சியின் நிர்வாகத்திடமிருந்து மாலை 4.15 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சரவாக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Alffian Sahma தெரிவித்தார்.
மாலை 4.48 மணிக்கு 14 வயது சிறுமி பொதுமக்களால் மீட்கப்பட்டதாகவும் மாலை 6.13 மணிக்கு 20 வயது இளம்பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாகவும் சரவாக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Alffian Sahma தெரிவித்தார். உயிரிழந்த 20 வயது இளம் பெண் Nur Afiqah Jemat என அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் SARIKEI அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டிருப்பதாகவும் சம்பவம் குறித்தான மேலதிக விசாரணையைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் சரவாக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Alffian Sahma விளக்கமளித்தார்.
Seorang remaja perempuan berusia 20 tahun maut selepas lemas ketika mandi di Air Terjun Wong Ruan, Sarikei. Mangsa bersama rakan dan seorang kanak-kanak perempuan 14 tahun, yang berjaya diselamatkan orang awam. Operasi SAR berjaya menemui mayat mangsa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *