கலவரத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

top-news

ஜூன் 12,

Bukit Jalil தேசிய விளையாட்டு மைதானத்தில் மலேசியா வியட்னாமுக்கு எதிரான ஆசியக் கால்பந்தாட்டத்திற்குப் பின்னர் கலவரத்தில் ஈடுபட்ட 5 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக Cheras மாவட்டக் காவல் துறை துணைத் தலைவர் RIDZUAN KHALID தெரிவித்தார். புக்கிட் ஜாலில் மைதானத்தினா இரண்டாவது நுழைவாயில் இரு கும்பலுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கலவரத்தில் முடிந்ததாக நம்பப்படுகிறது. 

இது தொடர்பானக் காணொலி சமுகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து கலவரத்தில் ஈடுபட்ட 19 முதல் 27 வயதுள்ள 5 இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் நள்ளிரவில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் Cheras மாவட்டக் காவல் துறை துணைத் தலைவர் RIDZUAN KHALID தெரிவித்தார். கலவரத்தில் ஈடுபட்ட மேலும் சிலரைக் காவல்துறையினர் அடையாளம் கண்டிருப்பதாகவும் கலவரத்தில் ஈடுபட்ட கும்பலை அடையாளம் கண்ட பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படியும்Cheras மாவட்டக் காவல் துறை துணைத் தலைவர் RIDZUAN KHALID கேட்டுக்கொண்டார்.


Lima pemuda berusia 19 hingga 27 tahun ditahan selepas terlibat dalam pergaduhan di pintu masuk kedua Stadium Nasional Bukit Jalil selepas perlawanan bola sepak Malaysia menentang Vietnam. Polis Cheras sedang mengesan suspek lain dan meminta orang awam tampil memberi maklumat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *