கொலை வழக்கில் 5 இந்தோனேசியர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 08 Jun, 2025
ஜூன் 8,
இந்தோனேசிய ஆடவர் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய 5 இந்தோனேசிய ஆடவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளதாகக் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். நேற்று காலை 9.36 மணியளவில் 30 வயது இந்தோனேசிய ஆடவரின் உடல் கத்திக் குத்துகளுடன் மீட்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 5 இந்தோனேசிய ஆடவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 5 இந்தோனேசிய ஆடவர்களும் உயிரிழந்த 30 வயது இந்தோனேசிய ஆடவருடன் ஒரே தொழில்சாலையில் பணியாற்றியவர்கள் என தெரிய வந்துள்ளது. 5 இந்தோனேசியர்களும் 21 முதல் 31 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் மேலதிக விசாரணைக்காக அவர்கள் இன்று முதல் 7 நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
Seorang lelaki Indonesia berusia 30 tahun ditemui mati dengan kesan tikaman di kawasan hutan. Polis menahan lima warga Indonesia dan rakan sekerja mangsa yang berusia antara 21 hingga 31 tahun untuk siasatan lanjut selama tujuh hari.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *