மின்கேபிள்களைச் சேதப்படுத்திய மணல் லாரி! ஓட்டுநரிடம் விசாரணை!

top-news

ஜூன் 11,

மணல் லாரியின் பின் பகுதி மோதி மின்கேபிள்கள் சேதமடையும்படியானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Iskandar Puteri, மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார். பள்ளி கூடம் அமைந்திருக்கும் Gelang Patah சாலையில் மணலை இறக்கிவிட்டு வெளியேறும் போது லாரியின் பின்பகுதி உயர்ந்திருப்பதைக் கவனிக்காத லாரி ஓட்டுநரின் இந்த செயலால் 3 மின்கம்பங்கள் சாலையில் சரியும்படியானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியது.

இச்சம்பவம் Gelang Patah சாலையில் பிற்பகல் 3.20 மணிக்கு நிகழ்ந்ததாகவும் காணொலியின் அடிப்படையில் லாரி ஓட்டுநரைக் காவல்நிலையத்திற்கு அழைக்கும் முன்னரே சம்மந்தப்பட்ட 69 வயது லாரி ஓட்டுநர் Iskandar Puteri காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தனது கவனக்குறைவால் இச்சம்பவம் நிகழ்ந்தததையும் ஒப்புக் கொண்டதாகவும் Iskandar Puteri, மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார். இந்த சம்பவத்தில் எந்த தரப்பினருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சேதமடைந்த மின்கம்பங்களைப் பொதுப்பணித்துறை விரைந்து சீரமைத்து வருவதாகவும் Iskandar Puteri, மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார்.

Di Gelang Patah, sebuah lori pasir merempuh kabel elektrik akibat kecuaian pemandu yang tidak menyedari bahagian belakang lori terangkat. Insiden tular di media sosial. Pemandu berusia 69 tahun menyerah diri di balai polis Iskandar Puteri. Tiada kecederaan dilaporkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *