இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 8-

இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ஆயுதங்களை
வழங்கும் நாடுகள் மீது அழுத்தம் கொடுக்க ஆசியான் ஒத்துழைப்பு கூட்டணி, வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், ஜி.சி.சி மற்றும் பல நாடுகள் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை ஆதரிக்கவும் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் முறையான அரச தந்திர நடவடிக்கைகளைக் கண்டறிவதும் இதில் அடங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"நாங்கள் ஐ.நா.வுடன் சேர்ந்து கருத்துக்களைத் தெரிவித்துள்ளோம், அது தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு நாட்டின் முயற்சி அல்ல. வளைகுடா
நாடுகளுடன் நாங்கள் செய்தது ஆசியான், பல நாடுகளுடன் விளக்கங்களை வலுவான அழுத்தம் கொடுக்கவும் ஓர் ஒப்பந்தம் உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து, அந்நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கும் பல நாடுகளின் நடவடிக்கைகள், அனைத்துலக சட்டம் மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளுக்கு முரணானவை என்று அவர் விவரித்தார்.காசா பகுதியில் நிகழும் வன்முறையைத் தடுக்கும் பொருட்டு, பேச்சுகளைத் தொடர பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.

Perdana Menteri Anwar Ibrahim menyatakan negara-negara seperti ASEAN, GCC dan lain-lain sedang mengambil tindakan diplomatik bagi menekan negara yang membekal dana dan senjata kepada Israel. Usaha ini bertujuan menyokong perjuangan rakyat Palestin dan menamatkan kekejaman di Gaza.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *