படகு கவிழ்ந்ததில் ஆற்றில் மூழ்கிய முதியவர்!

top-news

ஜுன் 9,

மீன்பிடிப்பதற்காகப் படகில் சென்ற முதியவர் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. காலை 11.20 மணியளவில் சம்மந்தப்பட்ட முதியவர் தனது மீன்பிடி படகில் Sungai Batang Kayan ஆற்றில் மீன்பிடித்த போது காணாமல் போனதாகச் சரவாக் மாநில மீட்பு ஆணையச் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் தேடுதல் பணியைத் தொடர்ந்ததாகத் தெரிவித்தார்.

காணாமல் போன முதியவர் 74 வயது உள்ளூர் ஆடவர் என அடையாளம் காணப்பட்டிருப்பாதாகவும் அவர் பயன்படுத்திய மின் படகு மட்டுமே இதுவரையில் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனதாக நம்பப்படும் முதியவரைத் தேடும் பணியில் காவல் துறையும் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் தெரிந்த பொதுமக்கள் Lundu மாவட்டக் காவல் ஆணையத்தில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Seorang lelaki warga emas berusia 74 tahun dikhuatiri lemas selepas terjatuh dari bot ketika menjala ikan di Sungai Batang Kayan, Lundu. Operasi mencari dan menyelamat (SAR) sedang dijalankan oleh pasukan bomba dengan bantuan penduduk setempat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *