மலாய்க்காரர்களே என்னோடு ஒன்றிணையுங்கள்! மகாதீர் அழைக்கிறார்!

- Sangeetha K Loganathan
- 04 Jun, 2025
ஜூன் 4,
மலேசியாவில் மலாய்க்காரர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மலாய்க்காரர்களின் சிறந்த எதிர்காலத்தை நிர்ணயிக்க ஓர் அமைப்பை உருவாக்கவிருப்பதாக முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார். மலேசியாவில் இருக்கும் அனைத்து மலாய் அமைப்புகளும் இந்த கூட்டமைப்பில் இணைய வேண்டும் என்றும் பெரிய குடையாகவோ அல்லது மலாய்க்காரர்களுக்கான ஒரு செயலகமாகவோ இது இருக்கும் என Tun Dr Mahathir Mohamad அழைப்பு விடுத்தார். இந்த ஒருங்கிணைந்த மலாய்க்காரர்களின் அமைப்பை உருவாக்குவது குறித்து பெரிக்காத்தான் தலைவர் Tan Sri Muhyiddin Yassin, எதிர்கட்சித் தலைவர் Datuk Seri Hamzah Zainudin, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Tuan Ibrahim Tuan Man ஆகியோரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார்.
ஆனால் நான் அம்னோவை அழைக்கவில்லை. ஆனால் மலாய்க்காரர்களை அழைக்கிறேன். இந்த மலாய்க்காரர்களின் ஒருங்கிணைந்த அமைப்பு அரசியல் கடந்து செயல்பட வேண்டும் என்றும், முக்கியமாகத் தேசிய மொழி மலாய், தேசிய பொருளாதாரத்தில் மலாய், நாட்டு சொத்துகளின் உரிமை மலாய், என மலாய்க்காரர்களின் நலன் கருதி மட்டுமே செயல்படும் என Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார். இப்போதைய நிலை நீடித்தால் மலாய்க்காரர்களின் எதிர்காலம் இருண்டுவிடும் என்பதை உணர்ந்த மலாய் அமைப்புகள் என்னோடு வாருங்கள் என Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார்.
Tun Dr Mahathir Mohamad menyeru semua pertubuhan Melayu di Malaysia untuk bersatu dalam satu gabungan demi masa depan bangsa Melayu. Gabungan ini akan melangkaui politik dan memfokus kepada hak Melayu dalam bahasa, ekonomi, dan pemilikan negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *