தாயின் அன்பிற்கு இனமும் மதமும் ஏது?

top-news
FREE WEBSITE AD

கடந்த சில நாள்களாக இந்திய மூதாட்டி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு அன்புடன் உணவு ஊட்டும் காணொலி சமூக வலைத்தளங்கள் முழுவது பரவி சமூக வலைத்தளவாசிகளின் பாராட்டையும் கருணையையும் குவித்தது. இப்பெருமைக்குரிய இந்திய மூதாட்டி 63  வயதான C.ANJALA DEVI எனும் கருணையாளர். JOHOR SULTANAH AMINAH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரைக் காண வந்தவர் அருகில் உள்ள மலாய் இளைஞருக்கு அன்புடன் உணவை ஊட்டியதை மற்றொரு நோயாளி காணொலியாகச் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

தற்போது அக்காணொலி மத இனம் பேதமின்றி அனைவராலும் பகிரப்பட்டு மனிதம் ஒன்றே அனைவரையும் ஒருங்கிணைக்கும் கருவி என நிரூபித்துள்ளது.

"எனது உறவினரைக் காண வந்த போது அருகில் உள்ள படுக்கையில் சோகத்துடன் இருந்த அந்த மலாய் ஆடவரின் பெயர் கூட தமக்கு தெரியாது. அவர் அழுதார், தனிமையில் இருப்பதாகவும் யாருமே இல்லை என்றதும், அம்மா நான் இருக்கிறேன் சாப்பிடு என அவருக்கு உணவை ஊட்டினேன். அப்போதும் அவர் கண்ணீர் வடித்தார். அவரின் கண்ணீரை நான் துடைத்தேன். இதற்கு ஏன் எல்லோரும் என்னை புகழ்கிறீர்கள், இது தாய்மையின் வெளிப்பாடு". அன்பின் வெளிப்பாடு என புன்னகையுடன் கடந்து சென்றார் 63  வயதான C.ANJALA DEVI எனும் வாழும் அன்னை திரேசா!

அண்டம் முழுதும் சொந்தமடா!
அன்னை மனம்போல் வேறில்லை
அவளின் அன்பிற் கீடில்லை!
தன்னைத் தாண்டிப் பிறருயிரைத்
தாங்கிப் பிடிக்கும் பேரருளே!
என்னை உன்னைப் போல்பிறரை
என்றும் பிள்ளை என்றெண்ணும்
பொன்னை நிகர்த்த பேருறவே
புலரும் பொழுதும் உனைக்கண்டே!
எந்த மதமாய் இருந்தென்ன?
எந்த இனமாய் இருந்தென்ன?
நொந்த பிள்ளை என்றறிந்து
நோயின் தன்மை தான்குறைக்க
சொந்த பிள்ளை போலெண்ணிப்
சோறும் ஊட்டி துயர்துடைத்த
அந்தத் தாயின் அன்பிற்கே
அண்டம் முழுதும் சொந்தமடா!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *