RM80,000 கடத்தல் பொருள்களுடன் 3 வெளிநாட்டினர் கைது! - Maritim Malaysia
.jpeg)
- Sangeetha K Loganathan
- 12 May, 2025
மே 12,
நேற்றிரவு Lahad Datu கடல் வழியாகப் பதிவு எண்கள் இல்லாத மீன்பிடி படகைச் சோதனையிட்டதில் எரிவாயு கொல்கலண்களும் சமையல் எண்ணெய்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் படகில் இருந்த 3 வெளிநாட்டினர்களையும் கைது செய்துள்ளதாகக் கடல்சார் பாதுகாப்பு ஆணையமான Maritim தெரிவித்துள்ளது. இதவு 10.30 மணிக்கு Lahad Datu கடல் பரப்பில் ரோந்து பணியிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மபந்தப்பட்ட படகிலிருந்து 17 கேலன் திரவ நிலையலான பெட்ரோலும் 51 கிலோ சமையல் எண்ணெய்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் மொத்த மதிப்பு RM80,000 என கணக்கிடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட படகிலிருந்த மூவரின் இருவர் Filipina நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் தற்காலிகமாக மலேசியாவில் தங்க அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு அகதி என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட முவரும் 34 முதல் 41 வயதுக்குற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைக்காக அவர்கள் மூவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Maritim Malaysia Lahad Datu menahan bot kayu mencurigakan yang membawa barangan kawalan tanpa permit termasuk minyak petrol dan minyak masak bernilai RM80,000. Tiga lelaki termasuk dua warga Filipina ditahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *